செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

Senthamizhe sollaayo?


 

cynfq;Fk; CLUtp Xq;fpaeP &w;Nw!

GyNthHfs; ePuhb ePe;jpa ePs;thNd

gyuwpa Ntz;bnahU ghl;nlOjp itj;Njd;

tpyfhJ ehDd;id tpdhj;jPahy; nkha;j;Njd;

 

ghujj;Jg; ghitAd;wd; G+uzj;jpy;  %o;fpjpdk;

G+hpj;j Gytnuyhk; gy;fbj;Jj; Njhw;whH

XHgpbAk; fpl;lhky; "X"ntd;Nw NtHj;jhH

Xnuhj;jf; $g;ghlha; Xntd;Nw NtHj;jhH

 

gok;Gytd; ts;Stdpd; gy;gjpe;j khHNg

fpog;ghl;b mt;ittha; jpd;WJa;j;j ghf;Nf

njhy;fhg;gpaj; jr;rd; njhl;Lnra;j ahNo

vy;NyhUk; fhKw;Wk; rPHFd;wh fw;Ng

 

nrhw;rpyk;G Mba nrk;khg;Gytnuy;yhk;

#y;jhpj;J cd;dhNy E}w;Foe;ij

njhy;GytH rhHghf ehd;tpdT fpd;Nwd;

nrhy;yplB nre;jkpNo ePgpwe;jnjg;Ngh?

 

வியாழன், 30 ஜூன், 2011

மர்ம யோகிராம் -(யோகாவின் யூ(யோ)கம்)



காவிகளின் ஆசைகள்
விசித்திரமாகவே இருக்கிறது

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை 
முப்பெரும் ஆசைகளைக் கொண்டவர்களின்
கவசமோ காவி உடை?

அன்றைய காவிகள் - காட்டை ஆண்டுகொண்டிருந்தனர் 
இன்றோ -நாட்டை ஆள ஆவேசப்படுகின்றனர்

யோகக்கலை...யோகம் கொடுக்குமென்று
யோகி துவங்கினார் கட்சியொன்று

எதிர்பார்த்த நிலையை எட்டவில்லை
யோசித்துப் பார்த்தபோது அசரீரி கூறியது
அன்னா வழியை பின்பற்று என்று

பற்றற்றவர் அல்லவே... பற்றிக் கொண்டார்
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதமாம் 

லட்சம் ஏக்கரில் பந்தலுடன்
ஆயிரக்கணக்கான கழிப்பறையும்
நூற்றுக்கணக்கான மின்விசிறியாம்
பாதுகாப்புக்கு காவலர்களும்

நாடித்துடிப்பு சீர்படுத்த
நாற்புறமும் மருத்துவர்களும் 

காட்டிய கணக்கு மட்டும்
பதினெட்டு கோடி

காவிகட்டிய யோகி வருகிறார் -
லீலாவிரதம்  ஆரம்பிக்க - எப்படி?

கோட்டீஸ்வரன் அல்லவா?
மண்ணில் பாதம் படலாமா
ஒன்றிரண்டு கோடியல்ல
ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி

தனக்குச் சொந்தமான
ஜெட் விமானத்தில் வருகிறார்

யார் கேட்டார்கள்
யோகா படித்தால் 
யோகம் அடிக்குமா என்று?

கோடிகள் சம்பாதிக்க முடிகின்ற 
மிகப்பெரிய யோகசாலையா இதுவென்று 
கேட்டுவிடத்தான் முடியுமா?
                                         ***

உழலுக்கு எதிரான போராட்டம் சரிதான் 
அத்தனை கோரிக்கைககளும் அருமை

வெளிநாட்டிலுள்ள  கறுப்புப் பணத்தை முடக்கி
அரசுடமையாக்கவேண்டுமாம்

சாதாரண யோகியாயிருந்தால்  நாமும்
இருக்கை தட்டி வாழ்த்து தெரிவிக்கலாம்
இருக்கை கூப்பி வரவேற்றிருக்கலாம்

ஆனால் -

அரியாசனக் கனவோடு கட்சி 
ஆரம்பித்தவரல்லவா
காவிமீது அரசியல் சாயம் 
அப்பட்டமாய்த் தெரிகிறதே 

இதுவும் அதே மட்டைthaane

அதனால்தான் ஆதரிக்கத் தயங்குகிறேன்

இங்கு  ஒரு சந்தேகம் -

ராம்தேவ் வெளிநாட்டில் கணக்கு துவங்குமளவிற்கு
அவர் வருமானம் போதவில்லையோ?

அதனால் வந்த வெறுப்புதான்
உண்ணாவிரதமாக மாறியதோ?
  
சரி..

ஆரம்பித்துவிட்டார்

எந்தப் போராட்டத்திலும்

கைதுப்படலமொன்று அரங்கேறுமென்று
அறியாதவரா என்ன?

கைதுசெய்யக் காவலாளி வர
மேடையிலிருந்து கீழே குத்தித்து
சூழ்நிலையை சீர்குலைத்தவரை

வலுக்கட்டாயப்படுத்தி 
வளைக்கவேண்டிய நிர்பந்தம்

இப்போது குறையோ 
அரசாங்கத்தின் மேல்  

கைதுக்குப் பயந்து குதிப்பவர்
போராட்டம் நடத்துமளவுக்கு
தைரியம் கொண்டது எதனால்.....?

குழப்பத்துடன் நான்...

யாருக்காவது தெரியுமா - இந்த 
யோகாவின் யூ(யோ)கம்
என்னவென்று?

வியாழன், 16 ஜூன், 2011

கலைகள் பலவிதம்.


 
கலைகள் பலவிதம். அக்கலைகளைப் படைப்பவன் கலைஞன்.

ஒரு விஷயத்தை ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் வெளிப்படுத்தும் அழகுதான் தனிப்பட்ட அக்கலைஞனின் திறமையாக வரையறுக்கப்படுகிறது.
 
ஒரு பெண்ணை கற்பனை செய்யும் போது, ஒரு கவிஞன் தன் எழுத்துக்களால் வர்ணிக்கிறான். ஒரு சிற்பியோ சிலையாகச் செதுக்கி செப்பணிடுகிறான். அதே போலத்தான் ஒரு ஓவியன் தன் தூரிகையால் வடித்துவிடுகிறான்.

கவிஞன் பெண்ணை வர்ணித்த மார்பகங்களோ மறைவிடங்களோ விரசமாகத் தெரியவில்லையாம், சிற்பி செதுக்கிய சிலையில் கொங்கைகளும், இடுப்பும் கலைநயமாகவே தெரிகிறதாம் ஆனால் ஒரு ஓவியன் வரைந்துவிட்ட நிர்வாணம்தான் விரசமாகத் தெரிகிறதாம். என்ன விந்தை இது?

இது தான் நடந்தது இன்று . "ஓவியம் ஆனான் ஓவியன்" என்ற எனது கவிதையைப் படித்துவிட்டு M.F. ஹுசைன் ஐ பாராட்டி எழுதிவிட்டு நான் இந்தியத்தாயின் நிர்வாணத்தை ரசிப்பதாக கூறுகிறார்கள்.

கலையை கலைநயத்தோடு பார்க்கத் தவறிவிட்டு மதச்சாயம் பூசி மெருகேற்றிக் குளிர் காயும் சில சுயநலக் கும்பல்களை கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு ஒரு கலைஞனை கேவலப்படுத்துவது எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்ததென நானறியேன்.

M.F. ஹுசேனின் பாரத மாதா ஓவியத்தில் நிர்வாண ஆபாசம் இருப்பதாகக் கூறும் அறிவாளிகளே... சீதாவை பெண்தெய்வமாகப் போற்றும் நீங்கள், அவளை கம்பராமாயணத்தில் கம்பன் வர்ணித்த விதத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? ஆபாசத்தின் உச்சமாக, அருவெறுப்பாக உள்ள கவிதைகளை புனிதமாகக் கொண்டாடுகிறீர்களே இது எந்தவிதமான கலையைச் சேர்ந்து? உங்கள் மூளையில் என்னவிதமான ரசனைக் குறைபாடுள்ளது என சோதித்துப் பாருங்கள்.

கம்பராமாயணத்தில் ஒரு சில பாடல்களிலுள்ள விரசத்தை மட்டும் இங்கு கொடுக்கிறேன். இதுவரை அறியாதவர்கள் அறிந்துகொள்ள....

அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகள்...

கம்பன் கற்பனைமட்டுமல்ல எக்ஸ்-ரே உம் எடுக்கிறார் என்கிறார் அண்ணா... எப்படி?

இராமன் வில்லொடித்தது கேட்ட சீதை ..." "இராமனே தனக்கு மணாளன் என்பது உறுதியானது கேட்டு உளம் பூரித்த சீதையின் உணர்ச்சியை விளக்கக் கம்பன் அந்த அம்மையாரின் மறைவிடம் அந்த நேரத்திலே அந்த நினைப்பாலே என்ன நிலை அடைந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டுமா? இராம பிரவாகமோ, பிராட்டியாரின் பெருமையோ அந்த மறைவிடத்தைப்பறிய விளக்கமில்லாவிட்டால் பூர்த்தியாகாதா என்று பக்தர்களைக் கேட்கிறார்

பாடலை உங்களுக்குக் கூறுகிறேன் தீர்ப்பளியுங்கள் தோழர்களே!" - என்கிறார்.

கோமுனியுடன் வருகொண்டலென்றபின்
தாமரைக் கண்ணினாநேன்ற தன்மையா
லாமவனே கொலேன்றைய நீங்கினான்
வாம மேகலையிற வளர்ந்த தல்குலே!

தெரிகிறதா நடந்த விஷயம்? காட்சியை இதோ காணுங்கள்

சேடி: அம்மா, வில்லை ஒடித்தார்!
சீதை: ஒடித்தது யாரடி?
சேடி: அவர்தான் , தேவி!
சீதை: யாரடி , சொல் சீக்கிரம்!
சேடி: சொன்னேனே அம்மா, அவர்தான் ஒடித்தார் ..

இந்த உரையாடல் நடக்கும்போது, சந்தோஷத்தில் சீதை திளைக்க "கலீரெ"ன்று ஒரு சத்தம் கேட்கிறதாம். அந்த சத்தம் கீழே விழுந்த மேகலையின் சத்தமாம். மேகலைஎன்றால் பெண்கள் மறைவிடத்தில் அணியும் அணிகலன்,! ஆனந்தத்தால் அல்குல் வளர, மேகலை அற்றுக் கீழே விழுந்ததாம் ஐயனின் பிராட்டிக்கு, சர்வலோக ரட்சகிக்கு...

இன்னொரு இடத்தில்...

இராமபிரான் தன் மனைவியை வர்ணிக்கிறாராம். இந்த உலகத்திலேயே மதபோதனைக்காக
என்று மக்கள் கொண்டாடப்படும் எந்தக் காவியத்திலும் காணமுடியாததை கம்பராமாயணத்தில் காணலாம் என்கிறார் அண்ணா.

அயோத்தியாக் காண்டம் , சித்திரக் கூடப் படலம் 31 ஆவது செய்யுளின் முதல் அடி:

"பாந்த டேரிவை பழிபடப் பரந்த பேர் அல்குல் ".

அதாவது வனத்தின் வசீகரத்தைக் காட்டிவரும்போது ... ஆசைக்கிளியே அங்கே பார் ஆரணங்கே இங்கே பார் என்று சொல்லாமல் ...

பாந்தள் - பாம் பின் படம் , தேர் - தேர்;
தட்டும்- ஆகியவையும்; பழிபட - உவமையாகாததால் ,
பழிப் புடைய பரந்த - பரவிய அகலமான;
பேர் அல்குல் - பெரிய அல்குல் உடையவளே! இங்கே பாரடி ...
என்று வனத்தின் காட்சிகளைக் காட்டிக்கொண்டு வருகிறாராம் இராமபிரான்.

எனக்குக் குமட்டுகிறது உங்களுக்கு எப்படியோ என்கிறார் அண்ணா.. .

இதைவிடக் கொடுமையாக இன்னொரு எடுத்துக்காட்டும் கூறிவிடுகிறேன்

சீதையைத் தேடி அனுமன் போகையில் அனுமநிடத்தில் சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறுவதாகக் கம்பன் கவிபுனைந்தது இது:

வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும், பாந்தழும் பணி வெண் றோங்கும்
ஓராலித் தேறும் கண்ட உனக்கு நான் உரைப்ப தென்ன?

இதன் அர்த்தமோ... என் மனைவியின் மேலிடமும் மறைவிடமும் இவ்விதமாக இருக்கும் என்று கூறி, இன்னின்ன அங்க இலட்சணமுடைய அவளை தேடிக் கண்டுபிடி என்று இராமர் பணிக்கிறார் என கம்பன் வர்ணிக்கிறார் ...

பரிதாபத்திற்குரிய அனுமனின் பாடு எவ்வளவு திண்டாட்டமாக இருந்திருக்கும்? இந்த அங்க லட்சணங்களை உடையவளை ஆராய்ந்து அறிந்து கண்டுபிடிக்க வேண்டுமே ... இப்படி ஏகப்பட்ட ஆபாச அணிவகுப்புகள் கொண்டதுதான் கம்ப இராமாயணம்.

இதையெல்லாம் புனிதமாகப் போற்றும் இவர்கள் ஹுசேனின் நிர்வாண மாதாவிற்கு வக்கிர சாயம் பூசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

பாரத மாதா இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவளா என்ன? இந்தியக் குடிமக்களாகிய இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் சீக்கியர் ஆகிய ஒவ்வொருவருக்கும் சொந்தமானவளள்லவா? இதை எப்படி இந்துக்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பது தான் புதிராக உள்ளது.

நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், கலைஞன் என்பவன் காலத்திற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவன். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன் எழுத்தோ, சிலையோ, ஓவியமோ... கலைஞனுக்கு ஒன்றுதான்.

அதனால் மூளைமேல் முலாம் பூசியிருக்கும் மதச்சாயத்தைத் துடைத்துவிட்டு கலையை கலையாகப் பாருங்கள் . கலைஞனை அவன் வாழும்
காலத்திலேயே போற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
 
- லதாராணி பூங்காவனம், குவைத்

புதன், 15 ஜூன், 2011

ஓவியம் ஆன ஓவியன் - M.F.ஹுசேன்



அரிய கலைஞன் - உலகு
அறிந்த கலைஞன்

வண்ணங்களோடு அவன்  விளையாடினான்
வர்ணம் அவனோடு விளையாடி விட்டது

அவன் விரும்பிப் பார்த்தான் 
தன் தூரிகையை -உலகே  
வியந்து பார்த்தது அவன் ஓவியத்தை

அபார கற்பனைத் திறன்
ஓவியத்தில் வெளிப்பட்டது  - ஆனால்
ஓர்   அபாயத்திரையொன்று  
அவன் வீட்டை முற்றுகை இட்டது

கா"ரணம்"  என்ன?

பாரத  மாதாவை
அவன் தூரிகை துளைத்துவிட்டதாம்
அவள் மேல்
நிர்வாணத்தை பூசிவிட்டதாம்
அதனால் சில இந்து அமைப்புகளுக்குக் 
கூசிவிட்டதாம்

ஓவியனை ஒழித்துவிட
குண்டர்களை ஏவினர்
தொண்டர்களை ஏவினர்

ஒப்பிலாக் கலைஞன்
இருந்தாலும் மானிடன்

  
ஓவியங்களுக்கு உயிரோட்டம் தந்தவன்
தன் உயிர்காக்க  ஓட்டம் கொண்டனன்

மதவெறி  கண்களை  மறைத்தது
மாபெரும் கலைஞனை
நம்மிடமிருந்து பிரித்தது

அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுந்தவன் 
அங்கேயே மாண்டு போகிறான்
எந்த உரிமையில் நம்மால் சொல்லமுடியும்  இவன்
இந்தியாவின் மைந்தனென்று ?

போற்றிப் பாதுகாத்திருக்க வேண்டிய 
பொக்கிஷம் -

காக்கத்தவறி வாய் 
பொத்திநின்றது அரசாங்கம்
இந்த  அவலம் நடந்ததெதனால்?

பாரத  மாதாவை    
தெய்வமாகப் போற்றுகிறார்களாம்

அவளை அம்மனப்படுத்தியதால்
ஆவேசம் கொண்டார்களாம்

அடப் பதர்களா... 
கோவில்களில்  தெய்வங்களையெல்லாம்
நிர்வாணமாக செதுக்கிவைத்து 
ரசித்துக் கொண்டிருக்கும்  
நீங்களா சொல்வது?

எல்லாக் கோவில்களிலும் 
மூலவிக்ரங்களே - 
அம்மனமாகத்தானே இருக்கிறது?

அபிஷேகம் செய்துவிட்டுத்தானே
ஆடை உடுத்தி  விடுகிறீர்கள்?

அவையெல்லாம் ஆபாசமாகத்
தோன்றாத  உங்களுக்கு -
ஹுசேனின் ஓவியம் மட்டும்
உறுத்தியது எப்படி?

இவன் இந்துவல்ல -
இஸ்லாமியன் என்பதால்தானே?

பாரத மாதா என்ன 
இந்துக்களுக்கு மட்டுமா சொந்தமானவள்?

இந்து முஸ்லிம் கிருத்துவ சீக்கியர் 
அனைவருக்கும் பொதுவானவளல்லவா?

அவளுக்கு எப்படி 
இந்துச் சாயம் பூசப்படுகிறது?

ஜனநாயக  நாட்டில்
ஒவ்வொருவருக்கும் உரிமையா அல்லது
ஒரு மதத்தினருக்கு மட்டும் உரிமையா?

வெட்கப்படுகிறேன் -
என்னை  இந்துமதத்தவள் என்று சொல்லிக்கொள்ள

உயிரோடு உள்ளபோது
தாய்நாட்டில்  வாழ அனுமதிக்காத அரசு
அவர் பிணத்தை தாய் மண்ணில் புதைக்க 
அனுமதிக்கிரதாம்...

தலை கவிழ்த்துக்கொள்ளுங்கள்
இந்தியப் பிரஜைகளே...
அவமான வெளிச்சம் முகத்தில்
அப்பட்டமாகத் தெரிகிறது

இந்த நிகழ்வு -

இந்தியவரலாற்றில்
இனவெறியால்  

இந்துக்கள் தம்முகத்தில் பூசிக்கொண்ட 
இன்னொரு அழுக்கு !

வியாழன், 2 ஜூன், 2011

பெற்றவள் ...உன்னை நான் பெற்றவள்!


ஐயிரண்டு திங்களெனை அடிவயிற்றில் பதுக்கி யதால்
மெய்யுருக்கி நித்தமுந்தன் மேனியதை வருத்தி யதால்
பெய்யுமழை யாகியெனைப் புதுப்புனலாய் ஆக்கி யதால்
மெய்யான என்னுடலுக் குன்னாலுயிர் பெற்றேன்

உன்னுதிரம் குழைத்து தினம் உட்கொண்ட காரணத்தால்
என்னிதயம் என்சுவாசம் எல்லாமும் ஒழுங்குபட
உன்னுள்ளே ஓசையின்றி ஓவிய மாய்நீ வரைய
இன்னுலகம் காணும் படிஇவ்வுரு வம்நான் பெற்றேன்

உண்ட உந்தன் முலைப்பாலால் உற்றதொரு தேகபலம்
கொண்டு நானும் வளர்ந்து சிறுமழலை யாகி ஓடிவர
கண்டு யெனைமற்றவர் கள்எழிலாக யெனையழைக்க
நண்ணிய தானலதா ராணியெனும் பெயர் பெற்றேன்.

முன்னெனக்குப் பிறந்தவர்கள் முத்தம்நிறை பெற்றவர்கள்
பின்னெனக்குப் பிறந்தவர்கள் பாசம்நிறை பெற்றவர்கள்
என்னருமை உடன்பிறந்தோர் அருமையான அறுவரையும்
உன்னாலே என்னுறவாய் இவ்வுலகில் நான் பெற்றேன்!

தக்க பருவந்தன்னில் தாய்மொழியைப் பயிற்றுவித்து
அக்கறை யோடு யெனை அருமையாக வளர்த்தெடுத்து
சொக்கும் தமிழோடு யெனைசேர்த் துவைத்து வாழவைத்து
மிக்கவரை ஈர்க்குமாறிந் தச்சிற்றறி வும்யான் பெற்றேன்.

பொன்னும் பொருளும் பெயருடனே உற்றபல நற்புகழும்
இன்னும் என்னென்ன உண்டோ இவ்வுலகில் இனிதாக
உன்னாலே எல்லாமும் பெற்றே னிதைஎல்லாம் விஞ்சியதாய்
பொன்னினும் மேலாக யென்தாயாய் உனைப் பெற்றேன்

ஞாயிறு, 8 மே, 2011

வரவுக்கேற்ற செலவு! - மாற்றுக் கருத்து!

மனிதன் - விசித்திரமானவன்

மனித வாழ்க்கை அற்புதமானது

சிலநூறு வருடத்திற்கு முன்
இயற்கையை ரசித்தான்
இயற்கையில் கிடைத்ததைப் புசித்தான்

வீட்டுத்தோட்டத்தில் விளைவதை உண்டு
இயல்பான வாழ்க்கை வாழ்ந்தான்...
தேவை என்பது -
உணவு உடை உறைவிடம் மாத்திரமே

காலத்தின் மாற்றம்
மனிதனின் தேவைகளும் மாற்றம்

கல்வியின் அவசியம்
வாழ்க்கையின் உயர்வு

நடைபயனம் ரத்தாகிவிட்டது
பத்தடிக்குமேல் உள்ள இடம் செல்ல
கார் தேவைப்படுகிறது

தோட்டம் மறந்தோம் -

நாமும் குளிர் சாதனத்துள் அடைக்கலம்
நம் உணவும் குளிர் சாதனப்பெட்டிக்குள்

சொகுசு வாழ்க்கைக்கு
அடிமையாகிவிட்ட சூழ்னிலையில்

எல்லாவற்றிற்கும் பணம் தேவைப்படுகிறது

மாதம் பிறந்தால்...
மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி கட்டணங்கள்
இணைய வாடகை, பெட்ரோல் கேஸ் செலவு
பள்ளிக்கட்டணம் பட்டுப்புடவை பார் செலவு
இன்னும் என்னன்னெவோ

ஆடம்பரமென்ற அத்தனையும் இன்று
அத்யாவசமாகிவிட்டது

எல்லாம் தேவையாகிவிட்டது
இவையின்றி இனி வாழ முடியாது

தேவை... அனைத்தும் தேவை

அதற்குப் பணம் தேவை....

இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்


வரவுக்கேற்ற செலவு செய் என்று!


மாற்றுகிறேன்...பழமொழியை ...

"செலவைக் கணக்கில் கொண்டு வரவிற்கு வழிசெய்" என்று!

உதவி செய்"

வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது


முரண்படுகிறேன் -

அடுத்தவருக்கு உதவுவது
அறிவிக்கப்பட வேண்டும்

தற்பெருமையிது என்று
தவறாக நினைப்பவர்கள்

தலையிலே குட்டிக் கொள்ளுங்கள்...

காரணம் இதுதான் -

உதவி தெரியப்படுத்தப்படும்போது
நாமும் இதுபோல் உதவ வேண்டும்ற
எண்ணத்தைத் தூண்டும்

உதவி மறைக்கப்படும்போது..

வாங்கிய கடனை திருப்பித்தராமல்
ஏமாற்றுவதற்கு வழி வகுக்கும்...

ஒருவன் உழைக்க
அடுத்தவன் தழைக்க
அமைத்த வழியாகிவிடும்

முட்டாள்களாகவே இருக்க வேண்டாம்


மாற்றுவோம்...பழைய மொழிகளை..

"
உறவுகளுக்கு அறிவித்துவிட்டு உதவி செய்"... என்று